வியாழன், 15 செப்டம்பர், 2016

18,000 தனியார் பள்ளிகள் நாளை மூடல்!


கர்நாடக மாநிலத்தில் நடந்த வன்முறைகளைக் கண்டித்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு நடைபெறவுள்ளது. வணிகர் சங்க தலைவர்களுள் ஒருவரான விக்கிரமராஜாவின் இந்த முழு அடைப்பு போராட்டத்தை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரித்திருக்கின்றன. முக்கியமான தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும் ஆதரித்திருக்கும் இந்த போராட்டத்தால் நாளை தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என பல போராட்டங்கள் நடக்க இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் ஆதரித்திருக்கும் நிலையில் நாளை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் தனியார் பள்ளிகள் அனைத்தும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பது போல புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நாளை நடைபெற இருக்கிறது. மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக