ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கோவையில் கொள்ளை அடித்த ஹிந்து முன்னணி ரவுடிகள்.. 15 மாடுகள் , செல்போன்கள் . பிரியாணி........

பிரியாணியும், நையாண்டியும்...
நான் அடிக்கடி சொல்வதுபோல, தமிழ் சமூகம் நையாண்டியின் மூலம் பிரச்சனையின் பாதையை வேறு பக்கம் திருப்பும் மொண்ணை சமூகம். ஒரு முக்கியமான பிரச்சனையை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, பகடி என்கிற பெயரில் அதனை நையாண்டி அல்லது கேலி செய்வதன் வாயிலாக பிரச்சனையின் தீவிரம் குறைந்து, அந்த உண்மையான பாதிப்புகளை நாம் மறந்துவிடுகிறோம். கோவை கலவரமும் இப்படியாக பிரியாணியின் மூலமாக மாற்றப்படுகிறது. பிரியாணி அண்டாவை திருடினார்கள் என்பதன் வாயிலாக அங்கு நடந்kovதிருக்கும் வேறு சில தீவிரமான பாதிப்புகளை, உண்மையான சேதங்களை நாம் மறந்துவிடுகிறோம். எல்லாரும் பிரியாணியின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வகையில் அவர்களுக்கு வெற்றிதான்.  முகநூல் பதிவு  அருண் மோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக