ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

10 வயது மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு

லக்னோ,செப் 3 – உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது மாணவனை ஆசிரியர் அடித்து உதைத்த காணொலி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ளது ஏ.ஐ.எம்.எஸ் சர்வதேச இடைநிலை பள்ளி. அங்குள்ள சிசிடிவி கேமராவில் , வகுப்பறையில் உள்ள மற்ற மாணவர்கள் முன்னிலையில் 10 வயது மாணவன் ஒருவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக அடிப்பது பதிவாகியுள்ளது.மேலும் இதில் ஆசிரியர் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து மாணவன் வகுப்பறையை விட்டு வெளியேறும் வரை அடிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த காணொலி காட்சி வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்த காவலர்கள் மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். thetamiltimes.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக