செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் ரஜினி ! தனுஷ் தயாரிப்பு... ஜாஸ் சினிமா வெளியீடா???

Pa Ranjith expresses happy about joining with Rajini again சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைகிறார் புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித். இதையடுத்து அந்த நல்ல செய்தியைச் சொன்ன நடிகர் தனுஷின் டிவிட்டுக்கு அவர் மகிழ்ச்சி என்று கருத்திட்டுள்ளார்.
ரஜினிகாந்த் என்ற நல்ல நடிகரை நாட்டு மக்களுக்கு மீண்டும் அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர் பா. ரஞ்சித். ரஜினியை வைத்து வித்தியாசமே இல்லாமல் இயக்கி வந்த இயக்குநர்களுக்கு மத்தியில், கபாலி மூலம் புதிய கோணத்தில் ரஜினியைக் காட்டிய சாதனையாளர்.


கபாலி பெரும் வரலாறு படைத்தது. தமிழ் சினிமாவின் புதிய சகாப்தமாக மாறி நிற்கிறது. இந்த நிலையில் பா. ரஞ்சித்துடன் கை கோர்க்கிறார். மிகக் குறுகிய காலத்தில் ஒரு இயக்குநருடன் ரஜினி அவ்வளவு சீக்கிரம் இணைய மாட்டார்.
இந்த நிலையில் இளைய இயக்குநரான ரஞ்சித்துடன் தனது முதல் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திலும் அவர் கை கோர்க்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
அதேசமயம், கபாலி என்ற வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த ரஞ்சித், இந்த முறை ரஜினியை வைத்து என்ன மாஜிக் செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது. ரஜினியுடன் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார். அதை ரீட்வீட் செய்து மகிழ்ச்சி என்று தனது டிரேட் மார்க் புன்னகையை பதிவு செய்துள்ளார் ரஞ்சித்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக