வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா எப்போது சென்னைக்கு வந்தாலும் கைது செய்யப்படுவார்?

சசிகலா புஷ்பா அதிமுக தலைமைக்கு எதிராக காட்டமான குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஒரு கட்சியின் எம்பி அதன் தலைமைக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்க கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. டெல்லியில் தங்கியிருந்தாலும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை, மாநிலங்களவைக்கும் வரவில்லை. அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியாத நிலையில் , இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் சிவஞானத்திடம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சசிகலா புஷ்பா மீது புகார் பண மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் “ நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 20 லட்சம் பணம் பெற்று தன்னிடம் மோசடி செய்து விட்டதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார் ராஜேஷ். அது போல தமிழக முதல்வரை இழிவு செய்த சசிகலா புஷ்பா மீது அவதூறு வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று திருச்சி காவல் ஆணையரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு அசிட் அடித்த ஜெயா இந்த சசிகலாவுக்கு என்ன எல்லாம் அடிக்க போகிறாரோ?

அதே நேரத்தில் டெல்லி வீட்டை விட்டு வெளியில் வந்த சசிகலா புஷ்பா “தனது உயிருக்கு ஆபத்து உள்ளது, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்” எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரித்த நீதிபதிகள் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை, டில்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போதைக்கு டெல்லியில் இருக்கும் சசிகலா புஷ்பா எப்போது சென்னைக்கு வந்தாலும் கைது செய்யப்படுவார். இப்போதைக்கு அதிமுக தலைமையிடம் இருந்து தப்பிக்க அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியிடம் சரணடைய வேண்டும் இப்போதைக்கு அம்மாதிரிச் சூழல் எதுவும் இல்லாத நிலையில் அவர் டெல்லியை விட்டு தமிழகம் வந்தால் நடவடிக்கைகள் அவர் மீது பாயும்.
சசிகலாவுடன் யாரெல்லாம் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள் என்ற பட்டியலை அதிமுக தலைமை எடுத்து வருவதாகவும் விரைவில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தெரிகிறது. இதுவரை முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் புகார் கொடுக்காமல் இருந்தவர்கள் கூட இனி சசிகலா புஷ்மா மீது அடுத்தடுத்து புகார்களைக் கொடுக்க முன் வருவார்கள்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக