சனி, 6 ஆகஸ்ட், 2016

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம்: அமெரிக்கா செல்ல டெல்லி போலீஸ் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் குறித்த கூடுதல் தகவல்களை பெற டெல்லி காவல் துறையினர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் உள்பாகங்களை எஃப்.பி.ஐ. ஆய்வுக்கு டெல்லி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதனை ஆய்வு செய்த எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சுனந்தா புஷ்கரின் உடலில் விஷம் கலந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அறிக்கை அளித்தனர். இதனையடுத்து சுனந்தா எவ்வாறு இறந்திருக்கலாம் என்று கூடுதல் தகவல்களை அறிய அமெரிக்கா செல்ல டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக