திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஸ்ரீகாந்த்,சுனைனா, சுப்பு பஞ்சு , சந்தானம் நடித்த நம்பியார் ...

ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு, தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால், சொந்த தயாரிப்பில் நம்பியார் என்ற படத்தை எடுத்து அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் சந்தானம், சுனைனா, ஜெயபிரகாஷ், சுப்பு பஞ்சு ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். கணேஷா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “என் தயாரிப்பில் முதல் படம், ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். ஒரு நடிகனா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்கிங்க, அது மாதிரி ஒரு தாயாரிப்பாளராகவும் என்னை ஜெயிக்க வையுங்க. என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்து இந்தப்படத்தில் போட்டிருக்கேன்.
பல பிரச்சனைகள், இடையூறுகள், தடைகள் எல்லாத்தையும் தாண்டி படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கேன். படத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்து என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க.” என்றார்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக