திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் மரதன் இந்திய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.. சுற்றுலா சென்ற ஒலிபிக் குழுவினர்

“I could have died there”, said a distraught O.P. Jaisha as she recalled the women’s marathon event at Rio Olympics during which she claimed she was neither provided water nor energy drinks by the officials despite designated stations were given for India.
நான் அங்கேயே மரண மடைந்திருக்கக்கூடும்." இப்படி சொல்பவர் ஓ.பி. ஜைஷா. ரியோ ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர். இந்திய ஒலிம்பிக் குழுவினர் அமைத்துள்ள ஸ்டால்களில் மட்டுமிருந்து தான் இவர்கள் தண்ணீர் அல்லது வேறு பானங்கள் அருந்த வேண்டும் என்பது கட்டளை. ஆனால் 8 கி.மீ தூரம் வரை தண்ணீர் தருவதற்கு யாருமில்லை. இதர நாடுகள் தங்கள் வீரர்களுக்காக ஒவ்வொரு இரண்டு கி.மீ. துரத்திற்கும் ஒரு ஸ்டால் அமைத்திருந்தார்களாம்.

நீரும் குளுகோசும் இல்லாமல் தாகத்திலும் தளர்ச்சியிலும் துவண்ட ஜைஷா போட்டியின் போது மயங்கி விழுந்து விட்டாராம்.
பதக்கங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மட்டும் போதாது. விளையாட்டு வீரர்களை மதிக்கவும் தெரிய வேண்டும். கிடைக்கும் தகவல்களையெல்லாம் பார்க்கும் போது ரியோ சென்ற (விளையாட்டு வீரர்கள் அல்லாத )குழுவினர் ஒலிம்பிக்கை முன்வைத்து சுற்றுலா சென்றிருப்பார்கள் போலிருக்கிறது.   webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக