வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா எம்பியின் கணவர், மகன் முன்ஜாமீன் கோரி மனு... கஞ்சா. ஹிரோயன் , கொலை. வழிப்பறி எல்லா கேசும் வரும்...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் மற்றும் மகன் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த பிரச்சனையில் அதிமுகவில் இருந்து எம்பி சசிகலா புஷ்பா சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் டி.லிங்கேஸ்வர திலகன்(54), மகன் எல்.பிரதீப் ராஜா(27) ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சசிகலா புஷ்பா எம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக சிலருடன் பகை, விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்கள் யாரையோ அவதூறாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக எங்கள் மீது சென்னை அண்ணாநகர் போலீஸார் இதச 294(பி), 323, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் குற்ற எண் என்ன? என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வழக்கில் நாங்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என அச்சப்படுவதால், எங்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என அதில் கோரியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக