வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சுவாதி.. நவீனா... இரண்டுமே ஆணவ கொலை? ஒரு காலும் ஒரு கையும் இல்லாத செந்தில் கொலை.....

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவளுடைய தம்பி தங்கையை ஒரு அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு தான் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு தான் காதலித்த பெண்ணை பலாத்காரமாய் இறுக்கி பிடித்து அவள் மீதும் தீ வைத்த பலசாலி ஆண் யார் தெரியுமா?
ஒரு மாற்று திறனாளி. வலது கையும், வலது காலும் இல்லாத இளைஞன். அதுக்கூட இச்சம்பவம் தொட ர்பானதுதான். ஒரு வருடத்திற்கு முன்பு பஸ் டிரைவராக இருந்த அந்த இளைஞனின் வண்டியில் படிக்கச் செல்லும் மாணவியாக நவீனா இருந்திருக்கிறாள். அவளை ஒருதலைபட்சமாக காதலித்த செந்தில் மீது அப்பெண்ணின் தாய்மாமன் கண்டித்தும் அவன் தொடர்ந்து அப்பெண்ணை காதலித்தான் என்று அவனுடைய கை காலை வெட்டியதாக அவனே புகார் கொடுத்தான். ஆனால் குடிப்போதையில் தண்டவாளத்தில் கிடந்ததாகவும் அப்போது ட்ரைன் ஏறியதில் கை கால் போனதாகவும் கூறி செந்தில் புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


இச்சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு பிறகே செந்தில் பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்து மூர்க்கமாக செயல்பட்டு தீ வைத்து கொண்டு நான்கு நாட்களுக்கு முன்பு அவன் செத்துப் போனான். இன்று நவீனா செத்துவிட்டாள்.
கை, கால் இல்லாத செந்தில் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் எந்த கருவியும் பொருத்திக் கொள்ளவில்லை. அந்தளவுக்கு வசதியும் இல்லை. பெரும்பாலும் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். மிக அத்தியாவசிய நேரங்களில் தவழ்ந்து தான் சென்றுள்ளார். அப்படி இருக்கும் போது தான் காதலித்த பெண் வீட்டிற்கு செல்லும் போது பெட்ரோல் தீப்பெட்டியோடு போனதும் இல்லாமல் அவளுடைய தம்பி தங்கையை அறைக்குள் தள்ளி பூட்டு போட்டதுவரை தனது ஒற்றை கால் சாகசமா? அல்லது அந்த ஒற்றைக் காலுக்கு பல கால்கள் பெருந்துணையா?
அதுமில்லாவிட்டால் தலித் காதல்களை நாடகக்காதல் என்று கூறி ஆணவக் கொலை நடத்தும் சாதிக் கட்சிகள் செந்திலை தீர்த்துக் கட்டிய சதி திட்டமா? அதற்கு நரபலி நவீனாவா?
இப்படி நாம் சிந்திக்க தூண்டிய குளறுபடிகள் ஏராளமாய் இருக்கையில் ராமதாஸ் நவீனா கொலை முயற்சியில் சதி திட்டம் இருக்கிறது என்கிறார். அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.
"செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். பள்ளிக்கும், வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், காதலிக்கும்படி மிரட்டுவதும் ஒரு கும்பலின் புதிய கலாச் சாரமாக உருவெடுத்திருக்கிறது.
தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களை தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்வதும், பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பதும் அக்கும்பலின் வாடிக்கையாகி உள்ளன.

இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுபவர்களுக்கு அவர்களின் சாதியைச் சேர்ந்த சிலர் அளிக்கும் ஆக்கமும், ஊக்கமும் தான் இதுபோன்ற கொடிய செயல்கள் பெருக காரணமாக உள்ளன." என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த கும்பல் என்பதும் நாடகக் காதல் என்பதும் ஜீன்ஸ் சட்டை போட்டு மயக்கும் கூட்டம் என்பதும் ராமதாசின் அருவெறுப்பான சாதி வெறுப்பு அரசியல்.
சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என்று அடித்து பேசும் ராமதாஸ் நவீனாவை கொன்றது செந்திலின் நாடகக்காதல் தான் என்று அறிக்கை விடும் ராமதாஸ் இந்த தருணத்தில் ஆதிக்கசாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்டு பயங்கரமான சித்திரவதைக்கு பின் கொல்லப்பட்ட கலைச் செல்விக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை ஏன் வெளியிட முடியவில்லை?
நாடகக் காதலால் நவீனாக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் நாடகக் கற்பழிப்புக்களால் கலைச் செல்விக்கள் தாங்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பாரா?
சுவாதிக்களும் நவீனாக்களும் கலைச்செல்விகளும் பாலினத்தில் ஒன்றுதான். ஆனால் சாதியச் சமூகத்தில் ஆண்டைகளால் வெவ்வேறானவர்கள் என்பதை சாதிப் புத்திகளோடு அலையும் ராமதாசுக்களுக்கு அரசியல் அறிக்கைக்கைக்கு தீனி போடும்.<    முகநூல் பதிவு திலீபன் மகேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக