ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதுகுறித்து தில்லி பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தரைவழி தொலைபேசி வாயிலாக (லேன்ட்லைன்) மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது. தற்போது மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நாளை கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் (ஆகஸ்ட்.15) இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.

மேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக