புதன், 24 ஆகஸ்ட், 2016

ஜெயலலிதா, கருணாநிதி, இடதுசாரி தலைவர்களுடன் பாமக வக்கீல் பாலு திடீர் சந்திப்பு

pmk balu meets jayalalithaa and karunanidhiசென்னை: பாமக வழக்கறிஞர் பாலு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர்களை இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் பாமக வழக்கறிஞர் பாலு.

இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதேபோல் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தது பாமக.
இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை பாமக வழக்கறிஞர் சந்தித்தாக கூறப்படுகிறது.
மேலும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்தார் பாலு. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை மாலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதம் ஒன்றை அனைவரிடமும் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து செய்வது தொடர்பான கடிதமாகவே அல்லது வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் தொடர்பான கடிதமாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.  /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக