திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கேரளாவை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரள அரசின் ,முயற்சியை கண்டித்து திமுக சார்பில் செப்டம்பர் 3 ம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான திமுகவினரை ஓன்று திரட்டி திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில்  போராட்டம் நடத்துவது என   கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பவானி ஆற்றின் கிளை நதியான சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது . இதற்காக ஆய்வுப் பணி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. கேரளா அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திமுக, பாமக, மதிமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கேரளா அரசைக் கண்டித்து உள்ளனர்.
இந்நிலையில் கேரளா அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சொத்துபாதுகாப்பு குழு துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

;இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரளா அரசு சிறுவாணியில் அணைக் கட்டினால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், விவசாயம் பாதிக்கபப்டும் எனவும், எனவே கேரளா அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். வரும் செப்டம்பர் மூன்றாம் தேதி திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், இந்த ஆரபட்டத்தில் கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான திமுகவினரையும், பொதுமக்களையும் இந்த கலந்து கொள்ள செய்வது என்றும், தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொங்கலூர் பழனிசாமி,  ‘’இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 மாவட்டங்களில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் திமுக வின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலும், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களார் பட்டியலும் தேர்தல் ஆணையம் வெளியிடப்படுவதாக அறிவித்து இருப்பது மக்களை குழப்பமடைய செய்யும் எனவும், எனவே உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களர் பட்டியலை திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைவிரும்பி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்’’என்று தெரிவித்தார்.  nakkeeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக