திங்கள், 22 ஆகஸ்ட், 2016

நடிகை ராதாவை சிறையில் இருந்து செல்போனில் மிரட்டும் ரவுடி வைரம் . சுந்தரா ட்ரவல்ஸ் படத்தில் நடித்தவர்


சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் நாயகி ராதா சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர், சென்னையைச் சேர்ந்த முனிவேல் என்பவரை காதலித்து வருகிறார். அதிமுக பிரமுகரான முனிவேல் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் முனிவேல் மனைவிக்கும், ராதாவுக்கும் மோதல் நிலவுகிறது. இரு தரப்பு சார்பிலும் சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல காஞ்சிபுரம் ரவுடி வைரம் என்பவர், 18ஆம் தேதி மாலை செல்போன் மூலம் தன்னை மிரட்டியுள்ளார் என்று ராதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், புழல் சிறையில் இருக்கும் ஒருவர் செல்போனில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே 8 வழக்குகளில் சிக்கியுள்ள வைரம் மீது கடந்த மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. புழல் சிறையில் உள்ள வைரத்துக்கு செல்போன் கொடுத்தது யார். சிறைக்குள் செல்போன் போனது எப்படி?.

சிறைக்குள் இருந்து கொண்டு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு துணிச்சல் வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே வைரத்தின் மனைவி லீலா, குன்றத்தூர் காவல்நிலையத்தில் நடிகை ராதா மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீலா, தன்னுடைய கணவர் புழல் சிறையில் உள்ளார். குழந்தைகளிடமே அவர் பேசுவது கிடையாது. சிறையில் இருக்கும் தனது கணவர் மிரட்டியதாக தவறான தகவலை ராதா பரப்பி வருகிறார். வாட்ஸ் அப் ஆடியோவில் பேசியது தனது கணவர் அல்ல. யாரோ இதனை செய்துவிட்டு தனது கணவர் மீது பழிபோடுகின்றனர் என்று கூறியுள்ளார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக