ஊடகவியலாளர் கிஷோர் தாவேவின் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். திங்கட்கிழமை இரவு, தன்னுடைய அலுவலகத்தில் வைத்து இன்னும் அடையாளம் காணப்படாத நபர்களால், கிஷோர் தாவே கொலை செய்யப்பட்டிருக்கிறார். 53 வயதான கிஷோர், ராஜ்கோட்டில் இருந்து வெளிவரும் ஜெய்ஹிந் - சஞ்ச் சமாச்சர் தினசரி பத்திரிகையின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர் என, காவல்துறை அதிகாரி நிலேஷ் ஜஜாதியா தெரிவித்திருக்கிறார். மேலும், ‘அவர் ஆறேழு முறை கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். காயங்களை வைத்துப் பார்க்கும்போது, கொலைக்குப்பின் இருக்கும் காரணம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இருக்கலாம் எனத் தெரிகிறது’ என்றும் கூறினார். ஜுனாகத் பி டிவிஷன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்னமம்பலம் .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக