ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

அமைச்சர் ராஜலக்ஷ்மி முன்னிலையில் மோதல் அடிதடி.. தேர்தல் கணக்கு வழக்கு தகராறு!

அமைச்சர் முன்னிலையில் மோதல் - அடிதடி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் எம்.எல்.ஏவும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி இன்று மாலை வாக்காளர்களுக்கு நன்றி சொல்லுவதற்காக தொகுதிக்குட்பட்ட நடுவக்குறிச்சி கிராமத்திற்கு சென்றார். அப்போது அவரை வரவேற்பதற்காக அந்த கிராமத்தின் அதிமுக கிளை கழக செயலாளர் சுப்பிரமணியம் சால்வையோடு நின்றிருக்கிறார். அவர் அருகில் அந்த கிராமத்தின் கட்சி தொண்டர் ஒருவரும் சால்வையோடு நின்றார். அமைச்சர் வந்தபோது சுப்பிரமணியம் அவருக்கு சால்வை போட முயன்றிருக்கிறார். அப்போது கட்சி தொண்டர் அமைச்சருக்கு சால்வை போட இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது சுப்பிரமணியம் மகன்கள் அந்த தொண்டரை தாக்கியதில் அவருக்கு காயமானது. இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழலில் அந்த தொண்டர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் பொருட்டு அட்மிட் ஆனார் என்கிறார்கள் நடுவக்குறிச்சி கிராமத்தினர்.


இதனிடையே கட்சி தொண்டர் மருத்துவமனையில் அட்மிட் ஆனது போலீஸ் வழக்காகிவிடும் என்பதற்காக அமைச்சர் ராஜலட்சுமி அந்த தொண்டரை சமாதானப்படுத்தியிருக்கிறார். இதனால் தாக்குதல் சம்பவம் போலீஸ் வரை போகவிலை. கட்சி மட்டத்திலேயே முடிக்கப்பட்டது. கடந்த தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக் கிளைகழக செயலாளர் சுப்பிரமணியன் வசம், பணம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப்பணத்தை அவர்கள் முறையாக வாக்காளர்களுக்கு தெரியாமல் ஒரு சிலருக்கு கொடுத்தும் மீதப்பணத்தை பதுக்கிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை அந்த தொண்டர் தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட பகையே இந்த மோதலுக்கு காரணம் என்கிறார்கள். - பரமசிவம்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக