சனி, 27 ஆகஸ்ட், 2016

நடிகர் அருண் விஜய் கைது ! போதையில் காரோட்டி போலீஸ் வாகனத்தை மோதினார்


Arun Vijay arrested in Chennai Police
Arun Vijay arrested in Chennai Police அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம்- 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அருண் விஜய்யை கைது செய்துள்ளளனர்.

அப்போது, தனது ஆடி காரில் அதிவேகமாக வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறதுகாரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி தப்பினார். இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை போலீசார்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக