சனி, 6 ஆகஸ்ட், 2016

ஜெ, மீது சசிகலா புஷ்பா டில்லி போலீசில் புகார்

புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவை தாக்கிய விவகாரம் தொடர்பாக கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும் சசிகலா புஷ்பா பார்லி.,யில் தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் டில்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட், சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இதற்கிடையில், தன்னை தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்ததாகவும், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதாவும், மற்ற எம்.பி.,க்களும் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தனக்கு உடனடியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் டில்லி போலீசில் சசிகலா புஷ்பா புகார் அளித்துள்ளார்.

சசிகலா புஷ்பா அளித்துள்ள போலீஸ் புகாரில், என்னை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள். ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதா எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அப்படி ராஜினாமா செய்யாவிட்டால் கொல்லப்படுவதாக மிரட்டுகிறார்கள். அதனாலேயே இந்த கிரிமினல் புகாரை டிசிபி.,யிடம் அளிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் உடனடியாக முழு போலீஸ் பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. அதிமுக.,வினரால் நான் மிரட்டப்படலாம். கொல்லப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாகவும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டுவதாகவும் டெல்லி போலீசில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா புகார் கூறியுள்ளார்.    தினமணி.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக