செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

வழக்கறிஞர்கள் போராட்டம் நிறுத்தம் .. மீண்டும் நீதிமன்ற பணிகளை ஆரம்பிப்பார்கள் .. தற்காலிக ஏற்பாடு!

வழக்கறிஞர்களுகெதிரான புதிய சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் போராட்டக்குழுவில் உள்ள 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்தது இந்திய பார் கவுன்சில். இதையடுத்து, வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு பிரதிநிதிகள் மற்றும் தமிழக பார் கவுன்சில் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இந்தப் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், போராட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும் இன்று முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 126 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைப்பதாக அகில இந்திய பார் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.மின்னம்பலம .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக