ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி! பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் லஞ்ச புகாரில் பதவி நீக்கம்!

லஞ்ச ஊழலுக்கு எதிராக, உரத்த குரல்கொடுக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைமை அதை செயலிலும் காட்டியுள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் லஞ்சம் பெற்ற புகாரையடுத்து, அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுச்சா சிங் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தலைமையில், அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டில்லியில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்துடன் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.மேலும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.  பஞ்சாப் ஆட்சியையும் ஆம் ஆத்மி பிடிக்க போகிறது..  நரேந்திர மோடியால் அர்விந்த் கேஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து என்ற கூற்றில் கொஞ்சம் உண்மை இருக்கிறது?

இந்நிலையில், தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம், அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுச்சா சிங், பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாது; இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கின. அந்த ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் காண்பித்து, சுச்சா சிங்கை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, ஆம் ஆத்மியின் பஞ்சாப் எம்.பி., பகவந்த் மான் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர். இதுபற்றி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சுச்சா சிங்கை பதவியிலிருந்து நீக்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுச்சா சிங், ‘அரவிந்த் கெஜ்ரிவால், சீக்கியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக