ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வைகுண்டராஜன் விரைவில் கைது ? 50 லட்சம் டன் தாது மணல்,10000 கோடி மணல்.....சகோதரர் புகார்.. பேரம் படியல்ல!


50 லட்சம் டன் தாது மணலை வெளிநாட்டுக்கு வைகுண்டராஜனின் வி.வி.மினரஸ் நிறுவனம் வெளிநாட்டுக்கு கடத்தியிருப்பதாக அவரது சகோதரர் குமரேசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளிடம் பேசிய அவர், சட்ட விரோதமாக கடத்திய மணல் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளின்
துணையுடன் தாது மணல் கடத்தப்பட்டிருக்கிறது. தாது மணல் கடத்தல் விவரங்களை நீதிமன்றத்திடம் தர தயாராக உள்ளேன். போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இது பற்றிய தகவல்களை கொடுத்துள்ளேன். தாது மணல் கடத்தலை தடுத்து நிறுத்தினாலே மதுவிலக்கை அமல்படுத்தலாம் அதற்கு உண்டான வருமானம் இதில் கிடைக்கும். முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல் 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தாது மணல் கடத்தலை தமிழக முதல்வர் தலையிட்டு தடுப்பதோடு, வைகுண்டராஜனின் சொத்துகளையும் அரசு முடக்க வேண்டும். தாது மணல் கடத்தல் பற்றி தெரிவித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக