வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பஞ்சாப் தேர்தலில் 14 பேருக்கு சீட் மனைவிக்கு அமைச்சு .. சித்துவின் பேரம்.. ஆடிபோன ஆம் ஆத்மி

14 பேருக்கு சீட்; மனைவிக்கு அமைச்சர் பதவி சித்து நிபந்தனையால் கெஜ்ரிவால் கலக்கம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான, நவ்ஜோத் சித்து விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை ஏற்பதில், பெரும் தயக்கமும், சிக்கலும் உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியில், அவர் இணைவதற்கான வாய்ப்புகள், குறைந்து வருகின்றன.
பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, அக்கட்சியிலிருந்து, நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். பஞ்சாபில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜூலை, 18ல், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை, அதிரடியாக ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த சித்துவின் டிமாண்டுகளுக்கு விட்டு கொடுத்தால் ஆம் ஆத்மி இவ்வளவுதான் என்ற எண்ணமே ஏற்படும் . சும்மா இருந்து சித்துவை பெரிய ஆளாக்கவேண்டாம்


பா.ஜ., தலைமை மீது குற்றஞ்சாட்டிய அவர், ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்காகவே, இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது. இதை அவரது மனைவியும், பஞ்சாப் மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான கவுர், உறுதிப்படுத்தி இருந்தார். சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி திரும்பியவுடன், சித்து தன் மனைவியுடன், ஆம் ஆத்மியில் இணைவார் என்றும் கூறப்பட்டது. சுதந்திர தினத்தில், சித்து, பரபரப்பை கிளப்புவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த வெள்ளியன்று அரவிந்த் கெஜ்ரி வாலை, அவரது இல்லத்தில், தன் மனைவியுடன், சித்து சந்தித்துப் பேசினார். அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருதரப்புமே, மிகுந்த அமைதி காத்து வருகிறது. இதன் பின்னணி குறித்து, ஆம் ஆத்மி கட்சியின், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கெஜ்ரிவாலை சந்திக்கும் வரை, சித்துவின் வருகை குறித்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த சந்திப் பின்போது, சித்து வைத்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன.தன் மனைவி க்கு மட்டும், தேர்தலில் சீட் தந்தால் போதும்; தேர்தல் பிரசாரம் மட்டும் செய்கிறேன் என்று தான், முதலில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், கெஜ்ரிவாலை சந்தித்தபோது, தமக்கும் சீட் தர வேண்டும்; தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் விதிமுறைகளின்படி, ஒரு குடும்பத்திற்கு, ஒரு பதவி மட்டுமே அளிக்க முடியும். சித்துவுக்காக, இந்த விதியை மாற்ற முடியாது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தால், அவரது மனைவிக்கு அமைச்சர் பதவி தர வேண்டு மென்றும் கேட்கிறார். இன்னும் கட்சியிலேயே சேரவில்லை. அதற்குள், தான் அழைத்து வரும் ஆதரவாளர் கள், 14 பேருக்கும், தேர்தலில் சீட் தர வேண்டு மென்று, கோரிக்கை வைத்துள் ளார். இவற்றை எல்லாம் ஏற்கும் நிலையில், ஆம் ஆத்மியின் தலைமை இல்லை.

மேலும், காங்கிரஸ் தலைவர்களுடனும், அவர் தொடர்பில் இருந்து வருகிறார். இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதால், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் சிலரும், அவருடன் பேசி வருகின்றனர். எனவே, ஆம் ஆத்மிக்குள் சித்து வருவதற்கான வாய்ப்புகள், நாளுக்கு நாள் குறைந்தேவருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக