திங்கள், 22 ஆகஸ்ட், 2016

126 வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. அகில இந்திய பார்கவுன்சில்..

126 வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, வழக்குரைஞர்கள் சட்ட விதிகளில் புதிய திருத்தங்களை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டது. இவை தங்களது நலன்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி வழக்குரைஞர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 126 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழக வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தில்லி சென்று அகில இந்திய பார் கவுன்சில் தலைவரை சந்தித்து விளக்கமளித்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதனிடையே வழக்குரைஞர்கள் மீதான சட்ட திருத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் தமிழக பார் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று 126 வழக்குரைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக