ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வதன் மூலம் 11 கோடி ...

புதுடில்லி:ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வதன் மூலம், 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ராஜதானி, உயர் வகுப்பு பயணிகள் பயணம் செய்யும் ரயில் களில், இந்த விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன. ரயில்வே துறையின் வருவாயை உயர்த்தவும், சேவையை மேம்படுத்தவும், தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ரயில் பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் முக்கிய வருவாயாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும், 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.


5 சதவீதம்:

இதனை சரிகட்ட, மற்ற வழிகளிலும், வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வேக்கு கூடுதல் வருவாய் திரட்ட, ரயில் நிலையங்கள், ரயில்
டிக்கெட்டுகள், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ரயில் மூலம் விளம்பர வருவாய், தற்போது 5 சதவீத அளவிற்கு மட்டுமே உள்ளது; மற்ற உலக நாடுகளில் இது, 20 சதவீதமாக உள்ளது.

கூடுதல் வருவாய்: இதனையடுத்து, ரயில்வே
மூலம் கூடுதல் வருவாய் திரட்டுவது குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்த கமிட்டி, அறிக்கை ஒன்றை அளித்தது. அதில் கூறியுள்ளதாவது:

ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களில், உயர் வகுப்பு பயணிகள் அதிகம் பயணிப்பதால், இவ்வகைரயில்களில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். இந்த ரயில் களில், உயர் வகுப்பு பயணிகள் பயணிப்பதால், இதில் செய்யப்படும் விளம்பரங்களின் மூலம், கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அதேபோல், 500 சூப்பர் பாஸ்ட் மற்றும் மெயில் ரயில்கள், 2,000 பாசஞ்சர் ரயில்களில் விளம்ப ரங்களை அனுமதிப்பதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும். ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப் படும் விளம்பரங்களால், ரயில்வேக்கு, ஆண்டுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜதானி :

இந்த அறிக்கையை ஏற்று, ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதியளிப்பதென, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

முதல்கட்டமாக ராஜதானி ரயில்களிலும், அதனைத் தொடர்ந்து, சதாப்தி ரயில்களிலும் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கப்படும். பின்னர், மற்ற எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களிலும், விளம்பரங்களுக்கு அனுமதி தரப்படும் என தெரிகிறது.

'செல்பி' எடுத்தால் 5 ஆண்டு சிறை:


ரயில் பயணிகள் சிலர், மொபைல் போனில் 'செல்பி' எடுத்தபோது, தவறி விழுந்து உயிரிழக் கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை யடுத்து ரயில்களில் செல்பி எடுப்பதை கட்டுப் படுத்தும் வகையில், ரயில்வே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, செல்பி எடுப்பது, சீட்டு விளையாட்டு போன்றவை, பயணிகளுக்கு தொந்தரவு தரும் செயல்களாக கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்; அபராதமும் வசூலிக்கப்படும்.

எவ்வளவு கிடைக்கும்?


ரயிலில் விளம்பரம் செய்ய அனுமதி தருவதன் மூலம் ரயில்வே துறைக்கு, 1.2 கோடி ரூபாய் முதல், 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக் கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சந்தை நிலவரம், போட்டியை வைத்து, அதற்கான தொகையை, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

13 ஆயிரம் ரயில்கள்:இந்தியாவில், தினந்தோறும், 13 ஆயிரம் ரயில் கள் இயக்கப்படுகின்றன; இவை, 63 ஆயிரம் கிலோ மீட்டர் துாரம் பயணிக்கின்றன. 2.3 கோடி பயணிகள் தினந்தோறும் பயணம் செய்கின்ற னர். இதனால், ரயில்களில் செய்யப்படும் விளம்பரம் பெரிய அளவில் வருவாயை ஈட்டித் தரும் என, மத்திய அரசு கருதுகிறது.   தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக