செவ்வாய், 19 ஜூலை, 2016

கபாலி இணையதளங்களில் ஏற்கனவே லீக்? தாணு நீதிமன்றம் சென்றது அதற்காகத்தான்

சில நாட்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக படங்களை இணையதளங்களில் அப்லோடு செய்வதைத் தடுக்க தயாரிப்பாளர் தாணு நீதிமன்ற படியேறினார் அல்லவா? அது, இனி நடக்கும் தவறைத் தடுக்க அல்ல. நடந்து விட்ட தவறை சரி செய்யவே அவசர அவசரமாக செயல்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்னரே, கபாலி திரைப்படத்தின் சென்ஸார் பிரிண்ட் இணையதளங்களில் ரிலீஸாகிவிட்டது. அதனால்தான் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் தாணு. ஆனால், இம்முறை சென்ஸார் டீம் சரியான ஆட்களிடம் கபாலி பிரிண்டைக் கொடுக்கவில்லை. சரியாக மார்கெட்டிங் செய்யத் தெரியாத திருட்டு - நெட்டிசன்கள் ‘கபாலி பார்க்கலையா கபாலி’ என கூவிக்கூவி பார்வையாளர்களை அழைத்துக் கொண்டிருக்க, இது ஏதோ ஸ்பேம் லிங்க் என்றபடி கடந்து சென்றுவிட்டனர் பார்வையாளர்கள். ஆனால், உண்மையை உணர்ந்து தாணு உடனடியாக நீதிமன்றம் சென்று படத்தை இணையதளத்தில் இருந்து எடுத்து தனது படத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.

இந்த வருடத்தில் மட்டும் கிளீன் சென்ஸார் பிரிண்ட் ரிலீஸாகும் ஐந்தாவது படம் கபாலி. இந்தி திரையுலகில் உத்தா பஞ்சாப், சுல்தான், கிரேட் கிராண்ட் மஸ்தி ஆகிய படங்களின் பக்கா பிரிண்ட் இணையதளங்களில் உலவின. இதுகுறித்து சென்ஸார் சர்ச்சை புகழ் தலைவர் பஹ்லஜ் நிஹலனி, “கபாலி திரைப்படம் சென்னையில் சென்ஸார் செய்யப்பட்டது. மும்பைக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சல்மான், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்களெல்லாம் இந்த மாதிரி லீக் ஆவதால் வசூலில் பாதிப்பு ஏற்படாது. சிறு ஹீரோக்களின் படங்கள்தான் வசூல் செய்ய முடியாமல் தவிக்கும். ரஜினி படமெல்லாம் லீக் ஆனாலும் வசூல் செய்துவிடும்” என்று கூறியிருக்கிறார் minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக