செவ்வாய், 19 ஜூலை, 2016

Delhi AIIMS எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவன் சரவணன் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார் !

தில்லி எய்ம்ஸ் மருத்தவக்கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான தடயங்கள் எதுவும் அவரது உடம்பில் இல்லை என்று, உடற்கூறு ஆய்வில் முடிவு வந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், 2009-2015-இல் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். கடந்த மே மாதம் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுழைவுத்தேர்வு எழுதி பட்ட மேற்படிப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 10-ஆம் தேதி அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்தனர். 
தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சரவணன் உடல் விமானத்தின் மூலமாக கோவை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து திருப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு  எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், சரவணனின் தந்தை கணேசன், என் மகனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் கூறினார்.
திருப்பூரில் நடைபெற்ற சரவணன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருத்துவர்கள் சிலர் கூறும்போது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, போட்டியில் இருக்கும் நபர் யாரேனும் மர்மமான முறையில் மருத்துவர் சரவணனை கொலை செய்திருக்கும் சாத்தியக் கூறுகளும் இருக்கலாம் என்றனர்.
சரவணன் இல்லத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அதற்கான தடயங்கள் எதுவும் அவரது உடம்பில் இல்லை என்று உடற்கூறு ஆய்வில் முடிவு வந்துள்ளது.
எனவே, இதனை கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுவாக, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தென் மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக தொந்தரவுகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணனின் சாவு குறித்து சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய, தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக