வெள்ளி, 8 ஜூலை, 2016

எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை


ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குடும்ப தரப்பில் இருந்து அவருடைய தங்கை முதன்முறையாக பேசியிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில்,
“என் அண்ணன் எங்களை எப்போதும் படி படி என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். எங்களை ஐஏஎஸ் ஆக்கணும் என்று ஆசைப்பாட்டார். அவரும் அப்படித்தான் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பார். இந்த அளவு செய்து இருப்பார் என்று நம்பவில்லை. கொலையை திசைதிருப்ப இந்த வேலை நடக்கின்றது.
நாங்கள் வழக்கறிஞரை இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளூர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றவர், ராம்குமார் கைதின்போது தங்களை பொறுப்பில்லாமல் விரட்டிய ஊடகங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
“ராம்குமார் கைது செய்யப்பட்ட போது மருத்துவமனையில் வைத்து எங்களை பெண் என்று கூட பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தனர். ராம்குமார் குற்றவாளி என்று முடிவு செய்வதற்கு முன் எப்படி எங்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கமுடியும்? எங்களுக்கு  நியாயம் கிடைக்கணும் சார். புகைப்படங்கள் எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தே ஆகவேண்டும் இல்லை என்றால் நாங்கள் அவர்கள் மீது வேறு நடவடிக்கை எடுக்க முடிவு செய்வோம்” என்று வருத்தத்துடன் கூறுகிறார்thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக