வெள்ளி, 8 ஜூலை, 2016

நான் நிறைய பேச வேண்டியுள்ளது: ராம்குமார் குமுறல்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து பேசினார். பிநிதானமாக பேசிய ராம்குமார், மிகுந்த பதற்றத்தில் உள்ளார். ராம்குமாரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காவல்துறை கடுமையாக சித்ரவதை செய்திருக்கிறது. மேலும் காவல்துறை தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்கிறார்கள் என கூறி ராமராஜனும் பரபரப்பை ஏற்படுத்தினார்.மேலும், நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது சார். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். ஃபேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார்.
பொறியியல் படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.">சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது என ராம்குமார் பேசியதாக ராமராஜ் கூறினார்.">இந்த கொலைக்கு வேறு சிலரின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகிப்பதாக கூறிய ராமராஜ் இது விசாரணையின் போது தெரிய வரும் என்றார்.  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக