வியாழன், 14 ஜூலை, 2016

கவுன்சிலர்களே இனி மேயர்களை தெரிவுசெய்வார்கள்....கோடிகள் கைமாறும்.. இங்கே கவுன்சிலர்கள் விற்கப்படும் வாங்கப்படும்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்வுக்கு ஒரு வாக்கும், மேயர் தேர்வுக்கு ஒரு வாக்கும் வாக்காளர்கள் பதிவு செய்வார்கள். ஆனால், தற்போது சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இந்த முறையை மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டது. அதாவது மாநகராட்சி மேயரை மக்களே தேர்வு செய்யும் முறையை மாற்றி, கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும் நகராட்சிகள் சட்டத்தில் 2011ஆம் ஆண்டு அடிப்படையில், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இச்சட்டத் திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக