வெள்ளி, 29 ஜூலை, 2016

மலேசியா தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்த ஒரே இந்திய தலைவர் தந்தை பெரியார்தான்.. மன்னிப்பு கேட்கும் ரஞ்சித்

மலேஷியாவுக்கு தொழிலாளர்களாக இடம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கபாலி திரைப்படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பாப்மார்லே, என பல அரசியல் தலைவர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மலேஷிய தமிழர்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் படம் இடம் பெறவில்லை. கபாலி படத்தில் பயன்படுத்தியிருக்கும் தலைவர்கள் மிக முக்கியமானவர்கள்தான் என்றாலும் அவர்களை விட மலேஷிய தமிழர்களுக்காக நேரடியாக போராடியவர் தந்தை பெரியார் ஒருவரே!

அதை விரிவாக எழுதி நமது மின்னம்பலம் இணையத்தில் ‘வரலாற்றை மறைக்கும் உரிமை ரஞ்சித்துக்கு இல்லை’ https://minnambalam.com/k/1469404866 என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.அதில் மலேசியாவுக்குச் சென்று தங்கியிருந்து பேசியவற்றையும், தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடியவற்றை களையெடுக்க அவர் செய்த முயற்சிகள் பற்றியும் விரிவாக பதிவு செய்திருந்தோம்.

;இதோ, பெரியாரின் படத்தை ‘கபாலி’ திரைப்படத்தில் வைக்காதது தொடர்பாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார் ரஞ்சித்! ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பெரியாரின் படத்தை ஏன் தவிர்த்துவிட்டீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த ரஞ்சித், “பெரியார் எனக்கு ரொம்ப பிடிச்ச தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. ‘சாதியை மற... மனிதனை நினை’ என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மெண்ட். நான் பெரியாரை வேணும்னே தவிர்க்கலை. தெரியாமல் விடுபட்டிருக்கலாம். படத்தில் அவர் படம் இல்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸாரி” என்று கூறியிருக்கிறார். மின்னம்பலம் .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக