வெள்ளி, 29 ஜூலை, 2016

அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பத்திரிகையாளர் பர்கா தத் சக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடந்துவரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்திருக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள் பெல்லட் குண்டுகளால் பார்வை இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். 47 பேர் இந்தப் போராட்டங்களின் போது
உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பத்திரிகையாளர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் கிளர்ச்சியாளர் ஊக்கப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டிக்கொண்டிருந்தார். அத்தகைய பத்திரிகையாளர்கள் தண்டிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது முகநூலில் பர்கா தத்,

“பத்திரிகையாளர் தண்டிக்கப்படவேண்டும் என சொல்கிறார்…இவர் பத்திரிகையாளரா? அவர் பணியாற்றும் அதே துறையில் இருக்கிறேன் என்பதை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். திமிர்த்தனமும் கோழைத்தனமுமே இதில் வெளிப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் மீது அவர் வசைமாரி பொழிந்துகொண்டே இருப்பார். ஆனால், அந்த வசைகளில் ஜம்மு காஷ்மீரில்  பாஜக, பிடிபி(பிரிவினை கொள்கை உடையது) கூட்டணி அரசு பாகிஸ்தான் மற்றும் ஹுரியத் அமைப்பினரிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார். மோடியின் பாகிஸ்தான் குறித்தான பார்வையையும் அவர் கேள்விக்கேட்டதில்லை. இவை இரண்டை நான் விமர்சிக்கிறேன், ஆனால் அதை அர்னாப் கோஸ்பாமி, தேசப்பற்றால் அளவிடுகிறார். அரசு குறித்து ஏன் அவர் இத்தனை மவுனம் சாதிக்கிறார்? கூஜா தூக்குகிறாரா?
கற்பனை செய்யுங்கள், ஒரு பத்திரிகையாளர் அரசாங்கத்திடம் ஒரு குறிப்பிட்ட ஊடகங்களை தடை செய்ய வேண்டும் என கேட்கிறார், அவர்களை ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள், தீவிரவாத ஆதரவாளர்கள் என முத்திரை குத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறார். இங்கே நம்முடைய சகோதரத்துவம் அரசியலாலும் பயத்தினாலும் இழுத்துபூட்டப்படுகிறது. நீங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது பெயரை உங்களுடைய நிகழ்ச்சியில் குறிப்பிடுவதால் நான் ஒன்றும் சுருங்கிப் போய்விடவில்லை திரு. கோஸ்வாமி. உங்களுடைய கருத்துக்கு நான் எவ்வித முக்கியத்துவத்தையும் தருவதில்லை” என தெரிவித்துள்ளார்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக