திங்கள், 18 ஜூலை, 2016

ஆதிசங்கரனுக்கு பக்கத்தில் திருவள்ளுவரா?: ஹரித்துவாரில் திறக்கப்பட்ட ‘தலித்’ திருவள்ளுவர் சிலையின் நிலை இதுதான்!

பாஜக எம்பி தருண் விஜய், 12 அடி திருவள்ளுவர் சிலையை கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு கட்சி பேதமின்றி தமிழக எம்பிக்கள் பலரும் சென்றிருந்தனர். சிலை திறக்கப் பட்டபோதே, உள்ளூர் இந்து மத அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலை நிறுவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சாமியார்களின் எதிர்ப்பு காரணமாக அங்கே சிலை வைப்பது தடுக்கப்பட்டது.
உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஸ் ராவந்த், ஆதி சங்கரரின் பெயர் கொண்ட சங்கராச்சாரியா சதுக்கத்தில்  திருவள்ளுவர் சிலை வைக்க பரிந்துரைத்தார். ஆதி சங்கரரின் சிலை அருகே திருவள்ளுவர் சிலை வைப்பதா என இந்து மத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“தேர்தல் அரசியலுக்காக தருண் விஜய், திருவள்ளுவர் என்கிற தலித் தலைவரை உயர்த்திப் பிடிக்கிறார். உத்தரகாண்ட் ஆலயங்களில் தலித் நுழைவு போராட்டத்தை செய்த விஜய்யின் அடுத்த அரசியல் இது” என்கிறார்கள் இவர்கள். இந்நிலையில் இடம் கிடைக்காத சூழலில் திருவள்ளுவர் சிலை முடக்கப்பட்டு,  அரசாங்க கட்டடத்தில் கிடத்தப்பட்டுள்ளது.
படம்: கவிதா உபாத்தியாய் (தி இந்து)  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக