வியாழன், 7 ஜூலை, 2016

நாயை மாடியிலிருந்து வீசிய மருத்துவ மாணவர்கள் கைதாகி ஜாமீனில் விடுதலை


சென்னை அருகே தெரு நாய் ஒன்றைய மாடியிலிருந்து தூக்கி வீசிய விவகாரத்தில் தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கவுதம் சுதர்சனன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய அந்த இரு மாணவர்களையும் குன்றத்தூர் போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கிப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இளைஞரை கண்டுபிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் முயன்றனர். முடிவில், நாயைக் கீழேத் தூக்கி வீசியவரும் அதனை வீடியோ எடுத்தவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர்கள் எனத் தெரியவந்ததாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கவுதம் சுதர்சனன், ஆஷிஷ் பால் ஆகிய இருவர் மீது குன்றத்தூர் காவல்நிலையத்தில் இந்தியக் குற்றவியல் சட்டம் 428, 429, மிருகவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது  tamil.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக