சனி, 23 ஜூலை, 2016

தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: ’பசி’ திரையிடல்..தமிழ் ஸ்டுடியோவின்....இயக்குனர் துரையுடன் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 100 படங்களைத் திரையிடுகிறது. இதன் தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது.
இது குறித்து அருண். மோ :
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளது. பல்வேறு வகையான தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளோம். தமிழ் சினிமாவின் பல்வேறு காலத்தில் வெளியான திரைப்படங்களை இந்த திரையிடலில் காணலாம். ஒவ்வொரு திரைப்படமும் ஏதோவொரு விதத்தில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். தமிழ் ஸ்டுடியோ கருத்தியலுக்கு மாறான திரைப்படமாக இருந்தாலும், அவற்றையும் திரையிட இருக்கிறோம்.
இதன் தொடக்க விழா நாளை சனி 23-07-2016 மாலை 05:30 மணிக்கு நடக்க இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்: பசி திரைப்பட இயக்குனர் துரை
இடம் : பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நேரம் : சனி மற்றும் ஞாயிறு – திரையிடல் மாலை 05:30 மணிக்கும் துவங்கும்.
வார நாட்களில் திரையிடல் சரியாக மாலை 7 மணிக்கு துவங்கும்.
திரையிடலுக்கு பின் சிறிய கலந்துரையாடலும் நடக்கும்.
இதில் முதல் கட்டமாக 10 திரைப்படங்கள் திரையிட உள்ளோம்.

பசி (1979) – 23-07-2016 – சனி – மாலை 05:30 மணி
தயாரிப்பு : சுனிதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம் : துரை
நடிப்பு : ஷோபா, விஜயன்
இசை : சங்கர் கணேஷ்.
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற திரைப்படம். சிறந்த நடிகைக்கான விருதை ஷோபா வென்றார். இந்த படம் பாடல் கட்சிகள் இல்லாமலும் சிறப்பாக ஓடியது.
பசி படத்தின் இயக்குனர் துரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார். மற்றவர்களை போல நாம் நினைத்த நேரத்தில் துரை போன்ற இயக்குனர்களை சந்திக்க, அவர்களின் பேச்சைக் கேட்க முடியாது. நாளைய திரையிடலை தவறவிடாதீர்கள். இயக்குனர் துரையை சந்திக்க அவசியம் வாருங்கள்.

பசி ஏன் முக்கியமான படம்? – ரமணி மித்திரன்
இயக்குனர் துரைக்கு அகில இந்திய அளவில்பெரும் வரவேற்பைக் கொடுத்த படம்”பசி’. “பசி’ படத்தின் கதை துரையின் மனதில்மிக நீண்ட நாட்களாக இருந்தது. தனக்குசந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் எல்லாம்அந்தக் கதையை பலருக்கும் கூறினார்.சிறந்த கதை எனக் கூறினார்களே தவிர அதனைப் படமாக்க எவரும் முன்வரவில்லை.குறைந்த பட்ஜட்டில் தயாரான துரையின்படங்கள் எல்லாம் 50 நாட்களைத்தாண்டிஓடும் என்றதால் துரையிடம் கதை கேட்கபலர் ஆவலாக இருந்தார்கள்.பசி கதையில் நம்பிக்கை கொண்ட துரைஅதனை தானே தயாரிக்க முடிவு செய்தார்.ஷோபாவின் நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துவருவதால் ஷோபாவையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். புதிய நடிகர்கள்நடித்தால்தான் பசியின் தாக்கத்தை ரசிகர்கள்உணர்வார்கள் என்பதால் புது முகங்களைத்தேடினார்.பிரவீணா செந்தில் சத்யாநாராயணன்ஆகியோர் துரையின் கண்டுபிடிப்புகள். பிரவீணா சிறந்த நடிகை. பின்னர் பாக்யராஜைமணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டார்.செந்திலைப் பற்றிசொல்லவே வேண்டா ம். செந்தில்என்ற பெயரைக்கேட்டால் சிரிப்புத்தான்வரும். சத்யாவும் நாராயணனும்பசி சத்தியா பசி நாராயணன் என்றேஅழைக்கப்படுகின்றனர்.”பசி’ படத்தில்பிராமணப் பெண்ணாகஷோபா நடித்ததனால் பிராமணப் பெண்களின் நடை உடை பாவனைகளைக் கவனிக்கச் செய்தார்.படப்பிடிப்பு முழுவதும் சேரியிலே நடந்ததால்சேரி வாழ்க்கை பற்றியும் ஷோபா அறிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். டெல்லிகணேஷ் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்தார். அதற்காக புது ரிக்ஷா ஒன்று வாங்கி ரிக்ஷாவைஎப்படி ஓட்டுவது என்று டெல்லிகணேஷ் பழகுவதற்கும் ஏற்பாடு செய்தார்துரை.படப்பிடிப்பு ஒத்திகையை ஸ்ரூடியோவில்நடத்திய பின்பு சேரியில் உண்மையானபடப் பிடிப்பு நடைபெறும். சேரியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது தெரியாதவகையில் மிகவும் யதார்த்தமாகப் படப்பிடிப்பை நடத்தினார் துரை.மேக்கப் இல்லை. பாட்டு இல்லை. டான்ஸ்இல்லை. ரசிகர்களைக் கவரும் எவையுமேஇல்லாமல் 22 நாட்களில் படப்பிடிப்புமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டினார்.பார்த்தவர்கள் பாராட்டினார்கள். விநியோகிக்க யாருமே முன்வரவில்லை. சற்றும்சளைக்காத துரை எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் எல்லா மொழிஇயக்குனர்களையும் அழைத்து படத்தைக்காட்டினார். அனைவரும் பாராட்டினார்களேதவிர படத்தை வாங்க முன்வரவில்லை.பசி படத்தை துரை வெளியிட்டார். ஓடாதுஎன விநியோகஸ்ர்களால் ஒதுக்கப்பட்ட பசிஓகோ என ஓடியதுடன் விருதுகளையும்அள்ளிக் குவித்தது. பசி படத்தைப் பார்த்தபெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.அகில இந்திய சிறந்த நடிகைக்கான “ஊர்வசி’ விருதை ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப் படத்துக்கான மத்திய அரசின்விருது. தமிழக அரசின் விருது. மாநில மொழிப் படத்தின் சிறந்த இயக்குனர் துரை எனபல விருதுகளை “பசி’ பெற்றது. ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் “பசி’ திரையிடப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது. “பசி’ படத்தின் வெற்றி விழா சென்னையில்நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெற்றி விழா நடைபெறும் தினத்தில்தான்ஷோபா தற்கொலை செய்தார். வெற்றிவிழாவை ரத்துச் செய்து ஷோபாவுக்குஇறுதி அஞ்சலி செலுத்தினார் துரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக