சனி, 23 ஜூலை, 2016

ஏமாளிகள் இருக்கும் வரை கோமாளிகளுக்கு கொண்டாட்டம் தான்... பருப்புடா...

Louis Fathima Xavier S :ரஜனி என்கின்ற வியாபாரி....
கபாலி, எதிர்பார்த்த அளவுக்கு, பேசப் பட்ட அளவுக்கு, அதில் ஒன்றும் இல்லை, என்பது நெருங்கிய நண்பர்களின், மதிப்பீடு....தமிழர்கள், பொதுவாகவே, சமூக பிரஞை இல்லாதவர்கள், என்பது, வரலாறு....ஆட்டு மந்தை மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள், ஜாதி, மதத்திற்கு அதிக உணர்ச்சிவசப் படுபவர்கள்...ஒருவரை பிடித்துப் போய் விட்டால், அவரது, அனைத்து தவறுகளையும் , மறுத்து விட்டு, அடிமையாய், பாதங்களில் வீழ்ந்து கிடப்பார்கள்...மூளையை உபயோகப் படுத்தி சிந்திக்க வேண்டிய நேரங்களில், உணர்ச்சி வசப் பட்டு சிந்தித்து, சொதப்புவதில் மன்னர்கள்....அதனால் தான்....இப்பொழுது ஒரே ஒரு அமைச்சர் மத்திய மந்திரி சபையில், அதுவும் ஒரு கேபினட் அமைச்சர் கூட நமக்கு கிடையாது....50 எம் பிக்கள் இருந்தும், தமிழகத்திற்கு, உருப்படியான திட்டம் எதுவும் கிடையாது....
ரஜினி, இந்த மந்தி மனப்பான்மையை முற்றிலும் புரிந்து, அதை பணமாக மாற்றிக் கொள்கின்றார்...."
மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது " என்று எந்த ரஜினி காந்த் சொன்னாரோ, அவர் தன்னைக் காத்துக் கொள்ள, தனது, தன்மானத்தையும், சுயமரியாதையையும், விற்று, ஜெயாவோடு சமரசம் செய்து கொண்டார் என்கின்ற ஒன்றே போதாதா, ரஜினி எவ்வளவு புத்திசாலியான வியாபாரி என்று புரிந்து கொள்வதற்கு ?
எனவே, ரஜினியின் மேல் கோபப் படுவதற்க்கோ, விமர்சிப்பதற்கோ, என்ன இருக்கிறது....ரஜினி, ஒரு வியாபாரி....நான் அவரை, வெற்றிகரமான வியாபாரியாகப் பார்க்கிறேன்....ஏமாளிகள் இருக்கும் வரை கோமாளிகளின் வாழ்க்கையில் கொண்டாட்டம் தான்...
தமிழன்டா....ஏமாளிடா ..... முகநூல் உயபயம் Damodran chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக