புதன், 27 ஜூலை, 2016

மூன்றாவது உலகப்போர் வேண்டாம் ராஜ்யசபாவில் தி.மு.க..... நீருக்காகவே உள்நாட்டு வெளிநாட்டு போர்கள்...

தண்ணீருக்காகவே, வருங்காலத்தில் மூன்றாவது உலகப்போர் மூளக்கூடும். அது போன்ற மூன்றாவது உலகப்போர், இந்தியாவிலும் ஏற்படுவதற்கு, மத்திய அரசு அனுமதிக்காது என்று நம்புகிறோம்' என, பார்லி.,யில், தி.மு.க., எச்சரித்துள்ளது. மகாநதியின் குறுக்கே, சத்தீஸ்கர் அரசு கட்டும் தடுப்பணைகள் காரணமாக, ஒடிசா மாநில விவசாயிகள், பெரும் பாதிப்படைவது குறித்து, ராஜ்யசபாவில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
   நன்றாக சிந்தித்துப்பாருங்கள் புரியும், இதை கூட புரிந்துகொள்ளாத நீங்கள் ஐயோ பாவம் .நதிகளை இணைத்தல், நதிநீரை பங்கிடல், ஒழுங்கு முறை படுத்தல் என, எல்லாவற்றையும் மேற்கொள்வதற்கு, திறமை யான உறுதியான நிர்வாகம் தேவை. இதற்கான முயற்சிகளில், மத்திய அரசு இனியாவது இறங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.உலகப்போர் என்ற ஒன்று நடக்குமானால், அதுதண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் என, கூறப்படுகிறது." இதை போன்ற அறிவு பூர்வமான கருத்தை தொலைவு நோக்கு பார்வையை யாரால் குறை கூறமுடியும்...

நதிநீர் பிரச்னை என்பது, மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. ஏற்கனவே, இரண்டு உலகப்போர்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக, மூன்றாவது உலகப்போர் என்ற ஒன்று நடக்குமானால், அதுதண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் என, கூறப்படுகிறது.

அது போன்ற மூன்றாவது உலகப்போர், இந்தியா வில் ஏற்படுவதற்கு, மத்திய அரசு அனுமதிக்காது என்று நம்புகிறோம். மத்திய அரசு ஏன், இது போன்ற நதிநீர் பிரச்னைகளில் தலையிடுவதற்கு தயங்குகிறது என்பது புரியவில்லை.

மாநிலம் விட்டு மாநிலம் என, ஓடிக் கொண்டிருக் கும் நதிகளின் போக்கை, வேண்டுமென்றே ஏன் தடுக்க வேண்டும்? காவிரி நதியை தடுப்பதால், எத்தகைய பரிதாபகரமான நிலை தமிழகத்தில் ஏற்படுகிறது தெரியுமா?

நதிகளை இணைத்தல், நதிநீரை பங்கிடல், ஒழுங்கு முறை படுத்தல் என, எல்லாவற்றையும் மேற்கொள்வதற்கு, திறமை யான உறுதியான நிர்வாகம் தேவை. இதற்கான முயற்சிகளில், மத்திய அரசு இனியாவது இறங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மகாநதியால் அமளி:சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. மகாநதியின் குறுக்கே, தடுப்பணைகளை கட்டும் முயற்சி யை, சத்தீஸ்கர் அரசு மேற்கொண்டு உள்ளது. இதற்கு, ஒடிசா அரசு எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று, இரு மாநில எம்.பி.,க் களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து, பதிலளித்த மத்திய இணை யமைச்சர் சஞ்சீவ் குமார், ''இந்த பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே இரு தரப்பையும் அழைத்து பேச்சு நடத்தியுள்ளோம். இன்னும் ஒரு ஆண்டுக்குள், இணக்கமான சூழல் ஏற்படாவிட்டால், இந்த பிரச்னை, தீர்ப்பாயம் வசம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக