வெள்ளி, 22 ஜூலை, 2016

கபாலி டிக்கெட்டுக்காக மந்திரி பி.ஏ. சிபாரிசுக் கடிதம்

ஜூலை 22, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் உலகமெங்கும் ரிலீசாகிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்கள் மானசீகமான நாயகனின் படம் வெளியாகும் ‘மகிழ்ச்சி’யில் உள்ளனர் ரஜினியின் ரசிகர்கள். முன்னூறில் தொடங்கி ஆயிரம், ரெண்டாயிரம் சில இடங்களில் பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு டிக்கெட் விலை கள்ளச்சந்தையில் கூட்டப்பட்டுள்ளது. அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கத் துடித்தாலும், பலருக்கு டிக்கெட் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. ரஜினி படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கவேண்டும் என்ற ஜூரம் பரவி விரவியிருக்க, வாட்ஸ் அப்பில் வந்த ஒரு சிபாரிசு கடிதத்தின் இமேஜ் வைரலாகப் பரவிவருகிறது. அது, அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடு.   பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

வி.பிரேம்குமார் மூத்த உதவியாளர்
மக்கள் செய்தி தொடர்புத்துறை
என்ற லேட்டர்பேடில், அபிராமி திரையரங்கம் மேலாளருக்கு எழுதப்பட்டிருந்தது. அதில் ‘இந்த கடிதத்தைக் கொண்டுவரும் திரு. ரிஸ்வான் அவர்களிடம் ஜூலை 22ஆம் தேதி முதல் காட்சி கபாலி படத்துக்கு பத்து டிக்கெட் கொடுக்கவும்’ என்று எழுதப்பட்டு, கீழே பச்சை இங்க்கில் வெ.பிரேம்குமார் என்று தமிழில் கையெழுத்து போடப்பட்டு இருந்தது. ஜூலை 15ஆம் தேதி இந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் உண்மையா? என்று அறிய, மக்கள் செய்தி தொடர்புத்துறை மந்திரி கடம்பூர் ராஜுவின் செல்பேசிக்கு தொடர்புகொண்டோம். நீண்டநேரமாகியும் செல்பேசி அழைப்பை ஏற்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக