வெள்ளி, 22 ஜூலை, 2016

யாழ்ப்பாணத்தில் ஜாதி சண்டையால் நின்று போன தேரை இழுத்த இராணுவம்

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது.
மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு காமடி : இலங்கை  அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!"
முகநூல் உபயம் .. karl marx

சமுக வலைதளங்களில் வறுபடும் ஈழத்தமிழர் :
Samuel Koilpillai:அதனால் தான் நான் இந்த மயிர் தமிழ் , கலாச்சாரம் இதையெல்லாம் கண்டுகிறதே இல்லை.மனுஷனா இருக்கிறவங்களை மட்டும் எனக்கு பிடிக்கும்.தமிழனை மாதிரி கேடுகெட்ட இனம் எங்குமில்லை. 

Meenalogini Mariampillaiதர்ஷினி இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை என்றுமே எனக்கு இருந்ததில்லை. இதில் பகிடி என்ன வென்றால் ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரன் தேர் இழுத்திருந்தால் ஆ..ஊ..... என்று ஆயிரம் பதிவேற்றம் போட்டு தம்பட்டம் அடித்திருப்பர். ஆனால் உள்ளூரில் இருப்பவன் இழுக்கப ் போனால் சாதி கத்தரிக்காய் என்று. எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் இந்த அப்பிள் காரன் மனித மூளையில், கொட்டிக்கிடக்கும் குப்பையை அழிக்க ஒரு app ஐ கண்டு பிடிக்கிரான் இல்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக