செவ்வாய், 26 ஜூலை, 2016

அமலா பால் விஜய் தம்பதிகள் மணமுறிவு...

தமிழ் சினிமாவில் “மைனா” வெற்றிப்படம் மூலம் பிரபலமானார் அமலா பால். அதன் பிறகு விஜய், ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்தார் அமலா பால். தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து தன் இரண்டு படங்களிலும் அமலா பாலை நடிக்க வைத்தார் இயக்குனர் விஜய். இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மூன்று ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம்

செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் அமலா பால். ஒரு இடைவெளிக்கு பிறகு சூர்யா தயாரித்த “பசங்க 2”, தனுஷ் தயாரித்த “அம்மா கணக்கு” ஆகிய படங்களில் நடித்தார். இயக்குனர் விஜய், பிரபு தேவா - தமன்னா நடிப்பில் ’தேவி’ படத்தை இயக்கி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு அமலா பால் திரைப்படங்களில் நடிப்பது இயக்குனர் விஜய் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். தன் கணவர் கூறிய அறிவுரைக்கு கட்டுப்படாத அமலா பால் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதாக முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், விவாகரத்துக்கு இருவரும் முன்வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக