புதன், 27 ஜூலை, 2016

இலங்கைத் தமிழர் .. .குளச்சல் துறைமுகம் திமுக அதிமுக காரசாரம்... சட்டசபையில் அமளி...

speaker Dhanapal condemns to dmk party சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை, குளச்சல் துறைமுக விவகார‌த்தால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டசபையில் 2-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.கே.சின்ராஜ், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அப்போதைய திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முழக்கமிட்டதால் அவையில் அமளி நிலவியது. திமுக உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக, திமுக உறுப்பினர் கே.என்.நேரு விவாதத்தில் பேசினார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் துறைமுகத்துக்காக திமுக ஆட்சியில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியதாகவும், இந்த ஆட்சி ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். திமுக காலத்தில் ரூ.10 கோடிக்கு செய்ய வேண்டிய வேலையை இந்த ஆட்சி ரூ.100 கோடிக்கு செய்திருக்கலாம்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், குளச்சல் துறைமுக பகுதியில் திமுக ஆட்சியில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து கடல் பகுதியில் வெறும் கற்களை மட்டும் கொட்டினார்கள். அதுவும் கடலில் சென்று விட்டது.
ஆனால் அடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.76 கோடி நிதி ஒதுக்கி நிபுணர் குழுவை அமைத்து குளச்சல் துறைமுகத்தை அமைத்தார் என்றே நான் விளக்கம் அளித்தேன். துறைமுகப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அதனை முதல்வரே திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமிக்கு பேச வாய்ப்புத் தரும்படி கேட்டனர். இதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். இதனால், திமுக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால், அவையில் குழப்பம் ஏற்பட்டது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக