திங்கள், 18 ஜூலை, 2016

ராம் குமாரின் முகநூலில் பல கேள்விகள்.. போலீஸ் சிறந்த கதாசிரியர் பரிசு பெறுவார்களா?


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராம்குமாரின் முகநூல் பக்கம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இன்று அவருடைய முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சுவாதி கொலை வழக்கு சம்பந்தமாக உள்ள சந்தேகங்கள் கேள்விகளாகக் கேட்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ சுமார் 25 நிமிடம் 12 வினாடிகள் நீளமுடையதாக உள்ளது. முகநூலில் திலீபன் மகேந்திரன் என்ற பெயரில் இயங்குபவர்தான், இந்த வீடியோவை தயாரித்து ராம்குமாரின் முகநூல் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கேட்கப்படாத கேள்விகள் என்று குறிப்பிட்டு சில கேள்விகளும் பதிவிடப்பட்டுள்ளன. அந்த பதிவில், ‘வழக்கறிஞர் ராம்ராஜ் மூலமாக புழல் சிறையில் ராம்குமாரிடமிருந்து Facebook password வாங்கப்பட்டது. உண்மையை நீதிமன்றமும், ஊடகமும் கண்டுக்கொள்ளாததால் ராம்குமாரின் முகநூலிலேயே இந்த வீடியோவை பகிர்கிறோம்.

ராம்குமார்தான் உண்மையான குற்றவாளி எனும் பட்சத்தில் நீதிமன்றத் தண்டனைக்கு கட்டுப்படுவோம். ராம்குமார் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறோம். நன்றி.
வீடியோவை முழுவதும் பார்க்கவும்… பகிரவும்... இது எங்களின் சில கேள்விகள் மட்டுமே. பல கேள்விகள் கேட்கப்படாமலே உள்ளது. இதில் கேட்கப்படாத முக்கிய கேள்விகள்… சுவாதியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே?
சுவாதியின் மொபைலைப் பற்றி போலீஸார் பேசாததின் காரணம் என்ன?’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக