புதன், 20 ஜூலை, 2016

570 கோடி கன்டெய்னர்களின் பதிவு எண்கள் போலியானவை !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது கோவையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவால் மூன்று கன்டெய்னரில் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரூ 570 கோடி பணம்குறித்து சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு சில முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வின் செயதித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சிறப்பு காவல்படையால் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட ரூ 570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனையேற்று சென்னை நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சி.பி.ஐ. ஆரம்பகட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மிகப் பெரிய தொகை பரிவர்த்தனை செய்யப்படும்போது அனைத்து மாவட்ட சூப்பரின்டன்டுகளுக்கும் தெரிவிக்கப்படவேண்டுமென்பது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டும் நெறியாகும். ஆனால் கன்டெய்னர் பிடிபடும்போது திருப்பூர் மாவட்ட சூப்பரின்டன்டுக்கு அந்த பணப் பரிவர்த்தனை பற்றி தெரிந்திருக்கவில்லை.
மூன்று கன்டெய்னர்களின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் AP 13X 5204, AP 13X 8650, AP 13X 5203. இவை போலி பதிவு எண்கள். உண்மையில் இவை ஆந்திராவைச் சேர்ந்த மோட்டார் பைக்குகளின் எண்களாகும். தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட அந்த பணம் நன்கு திட்டமிட்டு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது என சி.பி.ஐ. தரப்பைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.
மேலும் சி.பி.ஐ. தரப்பு கன்டெய்னரோடு சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் ரிக்கார்டுகளை சரிபார்க்கத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் யாருடன் பேசியுள்ளார்கள், யாரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது என சரிபார்த்து சி.பி.ஐ அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக