வியாழன், 14 ஜூலை, 2016

உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பேருக்குள் ஷாருக் கான் அக்சய்குமார்...

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016-ஆம் ஆண்டில் அதிக சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை ஒரு வருடத்தில் அதிகம் சம்பாத்தித்த 100 பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விப்ட், கடந்த வருடத்தில் ரூ.1141 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் இரண்டாவது இடத்தையும், எழுத்தாளர் ஜேம்ஸ் பீட்டர்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகர் ஜாக்கிசான் ரூ.409 கோடி வருமானம் ஈட்டி 21-வது இடத்த்தை பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஆண்டிற்கு ரூ.221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86-வது இடத்தையும், ரூ.211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக