புதன், 22 ஜூன், 2016

லைக்கா நிறுவனத்தில் ரெயிட், மோசடி, கைதுகள்...Lycamobile Paris offices raided in money-laundering probe

Lycamobile's offices in Paris have been raided and nineteen people arrested in an investigation into money-laundering, reports BuzzFeed. On 17 June, nine people were charged, including Lycamobile’s general manager in France, Alain Jochimek, the report said. The charges relate to money laundering of at least EUR 17 million and VAT fraud of several million euros, according to a statement from France's national financial prosecutor. லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Lycamobile French offices 'raided over fraud allegations' கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வரி ஏய்ப்பின் அளவு 13.4 மில்லியன் பவுன்டுகள். பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல நூறு கோடி பவுண்ட் பணம் கோணிப் பைகளில் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாறப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய நிறுவனமாக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்டுகள் அன்பளிப்பு தந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து ஈழத்தில் இனப் படுகொலை செய்த ராஜபக்சேவின் கூட்டாளி இந்த நிறுவனம் என்று கூறப்பட்டது. அதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் முதல் முறையாக விஜய்யை வைத்துத் தயாரித்த கத்தி படத்துக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் லைகா நிறுவனம் தமிழகத்தில் படம் தயாரிக்க தடை ஏதுமில்லை என்று அறிவித்ததால் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன. அதைத் தொடர்ந்து இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் ரஜினியை வைத்து 2.ஓ படத்தைத் தயாரித்து வருகிறது. கமல் ஹாஸனை வைத்து சபாஷ் நாயுடு படத்தை எடுத்து வருகிறது. அடுத்த விஜய் படத்தையும் தயாரிக்கிறது. இந்தியில் அக்ஷய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு என பெரிய நடிகர்களை வைத்து பல படங்களைத் தயாரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடிப் புகாரில் இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு அலுவலகம் சோதனையிடப்பட்டு 19 பேரும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது

Read more at//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக