புதன், 29 ஜூன், 2016

Istanbul துருக்கி விமான நிலைய குண்டு வெடிப்பு 28 பேர் இறப்பு 60 பேர் படுகாயம்


துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 28 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக