புதன், 22 ஜூன், 2016

மாநகராட்சி மேயர் நேரடி தேர்வு முறை ரத்து.. கவுன்சிலர்களே தெரிவு செய்வாய்ங்க... சம்பாதிக்க வேணுமே?

மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்கு  ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் அடிப்படையிலேயே தற்போதும் தேர்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாக்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு  திமுக தரப்பினர்  அறிமுக நிலையிலேயே  எதிர்ப்பு தெரிவித்தனர்.


தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூன்று சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார். அவை பற்றிய விவரம் வருமாறு:-தற்போது மாநகராட்சிகளுக்கான  தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மேயருக்கு இல்லாத காரணத்தினால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) ஆதரவு மாநகர மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. 

அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக  மாநகர மேயரை தேர்ந்தெடுப்பது என்று  அரசு  முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரசு  மாநகராட்சி தொடர்பான சட்டங்களை  பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது. மேலும் நகராட்சி உள்ளாட்சி திருத்த சட்டமசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ள விவரம் வருமாறு:-

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் 24ந் தேதிக்கு முன்னர் நடைபெற்றாக வேண்டும். 2011-ம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிரிவுகளின் எண்ணிக்கையை  நிர்ணயம் செய்வது மற்றும் அதனை தொடர்ந்து பிரிவுகளை வரையறை செய்வது  போன்றவைகள் அந்தந்த  மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களால்  மேற்கொள்ளப்பட்டது.  2011-ம்  ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் 2013-ம் ஆண்டே பெறப்பட்டது.

தற்போது 2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதிக்குள் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது மற்றும் பிரிவுகளை வரையறை செய்வது போன்றவற்றை மேற்கொள்வது.
அந்தந்த நகராட்சி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியது என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எனவே  இந்த பணிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதாலும், தற்போதைய தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் என்பதாலும் மேலும் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பிரிவு வாரியான வாக்காளர் பட்டியல்  தயாரிக்க இயலாது என்பதாலும் அரசு தற்போது நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான
சாதாரண தேர்தலின் தற்போதுள்ள ஆட்சி நிலவரை பகுதி அல்லது பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பப்பட வேண்டிய மன்ற உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையினை கொண்டு நடத்தலாம் என முடிவு செய்து அதற்கேற்றவாறு நகராட்சி  சட்டங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.  மாலைசுடர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக