திங்கள், 20 ஜூன், 2016

தமிழிசையின் சோத்து அரசியல் .... சங்கராச்சாரி காலடியில் உங்க மந்திரி உட்கார்ந்த போதே சாயம் வெளுத்திருச்சு

0a
0a1cபாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா, அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க, ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக், வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்.பி.யையும், அதுக்கான சாதியையும், அந்த சாதியை காப்பாத்தும் மதத்தையும் வச்சிக்கிட்டு என் ஊட்ல வந்து சாப்பிடறதா சொல்றாங்கன்னா என்ன அர்த்தம்?  குமரி அனந்தனுக்கும் வசந்தகுமாருக்கும் எமது ஆழ்ந்த  காங்கிரஸ் வாழ்த்துக்கள்
சங்கராச்சாரியாரே வந்தாலும் என் வீட்டில் சம்பந்தம் வைத்து சாப்பிடட்டும்; அப்புறம் யோசிக்கலாம்னு மெசேஜ் அனுப்பிருக்கான் துபாய்ல இருந்து காளிமுத்து.
ஒரு வேளை சாப்பாடு அல்ல… ஓராயிரம் இருக்குது உடைத்தெறிய. கிருஸ்ணர் கோவிலில் சுடலைமாடனுக்கு சிலை வைத்து படையல் படைத்திட முடியுமா என்ன? ஆகச்சிறந்த கடவுள்களையே ஒரு இடத்துல வைக்க முடியாத ஆகாத ஆகம விதிகளை தொலைத்துவிட்டு வாங்க தமிழிசை. அப்புறமாக உண்டு உரையாடலாம். யாம் அறிவோம் உரையாடுவீரே அன்றி உறையாட மாட்டீர் என்று.
கணேசனுக்கும் பெருமாளுக்கும் அடிக்கும் மணியை கருப்பசாமிக்கு அடிக்காத கூட்டம் சமத்துவத்தை பேசுவது நகைப்புக்குரியது. கிருஸ்ணர் சுடலைமாடனோடு பட்டையடித்து படையல் சாப்பிட்டு வேட்டைக்கு போய் விடுவாரா என்ன? பிறப்பு முதல் இறப்பு வரை, காதல் முதல் கடவுள் வரை, அத்தனை நிலையிலும் சாதி வைத்து சடங்கு பார்க்கும் மதத்தை ராஜ்ஜியமாக்கத் துடித்துக்கொண்டு, ஓட்டுக்கும் கூட்டுக்கும் மட்டும் தலித் வீட்டில் சாப்பிட வந்துட்டா நம்பிட்டு வந்து நாயாய் நிக்க நாங்க என்ன சங்கராச்சாரியார் கால்ல உக்காந்து கெடக்கும் பொன்னாரா என்ன?
செவ்வாய தொட்டோம், புதனை தொட்டோம்னு அறிவியல் ஆட்டம் போடும் உலகில், தலித்தை தொட்டோம்னு, சாப்பிட்டோம்னு போஸ்டர் அடிப்பது அசிங்கமாக இல்லையா உங்களுக்கு? மாட்டுக்கும் மூத்திரத்துக்கும் கொடுக்கும் மதிப்பை மனுஷனுக்கு அளிக்கத் தெரியாத மூடர்கூடத்தில் அதெல்லாம் உங்களால் உணர முடியுமா என்ன?
பிஜேபியின் சமூக நீதி வெமுலாவின் வழக்கில் நிர்வாணமாய் கிடக்கிறது. வெமுலா எனும் தலித்தின் கொலைக்கு நீதி எங்கே? ஸ்மிரிதி இரானியை கேள்வி கேட்க துப்பில்லாத நேர்மை, எந்த முகத்தில், எந்த தைரியத்தில், தலித் வீட்டில் சாப்பிட வருகிறது? கருவறுக்க கல்லூரி, கை நனைக்க காலனியா?
ஏய்த்தலும் பிழைத்தலுமாக ஊர் சுற்றும் பணத்தை விடவா எஸ்சி, எஸ்டி யுனிவர்சிட்டி மாணவர்களின் ஸ்காலர்ஷிப் பணம் கார்ப்பரேட் அடிமை மோடி அரசுக்கு சுமையாகிப்போனது? வாயில் சுட்டு எழுத்தில் எடுத்து வட்டச் சம்மணமிட்டு வாயில் போட்டு போஸ்டரில் ஒட்டிக்கொள்ள தலித்கள் ஒன்றும் உங்களைப்போல வடை அல்ல. எமக்கும் அரசியல் தெரியும். அதிலும் காவி சர்ப்பங்களின் சந்தர்ப்ப அரசியல் அறவே தெரியும்.
சுதந்திரப் போராட்டம் முதல் மெட்ராஸ் வெள்ளக்காட்டில் கை கோர்த்து நின்றது வரை ஒருதாய் பிள்ளைகளாக வாழும் இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்து, இந்துவாக தலித்களை ஒருங்கிணைத்து, ஓட்டுப்பொறுக்க நீங்கள் ஆயிரம் வழிகளில் முயன்றாலும் அம்பலப்பட்டும் அவமானப்பட்டும்தான் நிற்பீர்கள்.
நிஜமாவே சமத்துவம் விரும்பினால் பிஜேபி சங் பரிவார்களைத் துறந்து, சங்கர மடத்து சம்பிரதாயங்களை உடைத்து நொறுக்கி வெளியே வாருங்கள் தமிழிசை. அது வரை உங்கள் கட்சி வழக்கப்படி உங்கள் வீட்டில் நீங்களே குண்டெறிந்து விளையாடுங்கள் ஒரு ஓரமாக.
நன்றி, வணக்கம்!
.
Courtesy: maattru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக