திங்கள், 6 ஜூன், 2016

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு! மோட்சம் போக கங்கா தண்ணி!

petrol-diesel-priceரசின் கொடூர சுரண்டலைச் சகிக்க முடியாமல் போதுமடா வாழ்க்கை என்று தீக்குளித்து சாகலாம் என்று நினைத்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 4 ரூபாய் 45 காசுகளும் டீசல் விலை, லிட்டர் ஒன்றிற்கு 6 ரூபாய் 46 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. கூடவே சமையல் எரிவாயு உருளை ஒன்றிற்கு விலை 21 ரூபாய் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ 65.60 மற்றும் ரூ 53.93 ஆகும். வண்டிச் சக்கரம் சுழன்றால் தான் தங்கள் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்றிருக்கும் இந்நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் மிகவும் இழிவான சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒழுங்குமுறை ஆணையம் என்று வெகுசில ஏகாதிபத்திய புல்லுருவிகள் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் எனும் பெயரில் உழைக்கும் மக்களின் இரத்தத்திற்கு விலை பேசுகின்றனர்.
மக்களின் வாழ்நிலையோ மனநிலை பிறழ்ந்த அபலைப்பெண்ணை கயவர் பலர் வன்புணர்வு செய்வதைப் போன்று பலமுனைத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. எந்தத் திசையில் இருந்து நம்மைச் சூறையாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளமுடியாதபடி மக்கள் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
‘லெளகீக வாழ்க்கையின் இன்னல்களுக்கு தனியார்மயம் ஏகாதிபத்தியம் நுகர்வியம் தான் காரணம் என்று கூறாதே. அவையெல்லாம் ஞானிகளின் மகத்தான கண்டுபிடிப்புகள்’ என எழுத்தாளர் – சமூக விமரிசகர் பெயரில் உலவும் நவீனபுராணிகர்கள் கடுமையாக மக்களைச் சாடுகின்றனர். சனாதன தர்மத்தின் அவசியத்தை கண்துஞ்சாமல் எடுத்துரைக்கவும் செய்கின்றனர்.
ganga-jalஇந்நிலையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கற்பனைக்கு எட்டாத விலைவாசியால் மக்கள் செத்து விட்டால் அதற்குக்காரணம் தனியார்மயம் ஏகாதிபத்தியம் அல்ல; முற்பிறவியில் மக்கள் செய்த பாவம்தான் காரணம்; கர்மவினையைத்தான் முதலில் தீர்க்க வேண்டும்’ என்று பார்ப்பனிய மோடி கும்பல் புதுத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இப்புதுத்திட்டத்தின்படி பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்படும் பொழுதே ஹரித்துவார், ரிசிகேசிலிருந்து கங்கையின் புனித நீர் இணைய வர்த்தகம் மூலமாக, சாகக் கிடக்கும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம் இணைய செயலியை (E-governance APP) அறிமுகப் படுத்துவதாக மோடிகும்பல் 31-05-2016 அன்று அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின்படி உள்ளூர் அஞ்சல்காரர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும். இணையத்தின் வாயிலாக கங்கை நீருக்கு ஆர்டர்கள் எடுக்கப்படும்.
இந்தவகையில் கங்கையின் புனித நீரை நம் வீட்டிற்கு கொண்டுவரும் காவிகளின் கரசேவை வெறும் இணையசேவை மட்டுமல்ல ஏகாதிபத்தியத்திற்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து செய்யும் எதிர்சேவையாகும்!
ஒருவேளை இதை வாசிக்கிற வாசகர்கள் ‘ஐயா, காவி வானரங்கள் முன் தள்ளும் மோட்சத்தில் நம்பிக்கை இல்லை; மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை; நாங்கள் சித்தர், அசுர மரபை சேர்ந்தவர்கள்” என்று பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுத்த சிவவாக்கிய சித்தரின் கீழ்க்கண்ட பாடலை எடுத்துக்காட்ட கூடும்.
“கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களும் முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.”
petrol-diesel-price‘மோட்சத்திற்கு போகாதவனெல்லாம் சூத்திர தலித்துகளாக பிறப்பர்’ என்று பார்ப்பனிய இந்துமதம் கதைக்கிற பொழுது இறந்தவன் பிறப்பதில்லை என்று அடித்துப் பேசும் சித்தர் பாடல் சரியான சவுக்கடிதான். பார்ப்பனியம் எனும் பெயரில் கழிவு நீரை அஞ்சலில் அனுப்பும் காவிக்கும்பலை தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இந்தவகையில் எளிதில் இனங்கண்டுகொள்ளும். ஆனால் இதோடு இன்னொன்றையும் சேர்த்துப் புரியவேண்டும். இந்த மோட்சத்தை வைத்து ஏமாற்றும் பார்ப்பனியக் கும்பல் தான் ஏகாதிபத்தியத்தின் பங்காளியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது என்பதைத் தெளிய வேண்டும்.
ஆக ஊத்தைப் பார்ப்பனியம், தனியார்மய ஏகாதிபத்தியற்கு இப்படி சேவை செய்கிறதே என்று ‘இட்ட குண்டமேதடா இருக்கு வேதமேதடா’ என்று சித்தர்களை போல பார்ப்பனியத்தை இன்னொரு ரவுண்டு எதிர்க்காவிட்டால் அடுத்த வாரமும் பெட்ரோல், டீசல் விலை உயரும் இந்தமுறை பார்ப்பன மோடி கும்பல் தலைமாட்டில் வைக்க காமாட்சி விளக்கை தபாலில் அனுப்பும் என்பதை மறந்துவிடாதீர்!
– இளங்கோ  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக