செவ்வாய், 28 ஜூன், 2016

குஷ்பூ :சுவாதியின் கொலையே இறுதியானதாக இருக்க வேண்டும்

மென்பொறியாளர் சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதியின் குடும்பத்தினரை இன்று குஷ்பு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் கடைசியாக இந்த சம்பவம் இருக்கட்டும். இந்த கொலையை பார்க்கும்போது, சுவாதியின் பெற்றோர் மட்டும் ஒரு குழந்தையை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை நாம் இழந்திருக்கிறோம். சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக