செவ்வாய், 28 ஜூன், 2016

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வாசுதேவ் என்கின்ற அயோக்கியன்

மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது.
இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான்.
யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தால் அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தைப் பேணுவதுண்டு. ஆகவே யானைகள் பயன்படுத்தும் பாதைகளும், அவற்றை ஒட்டிய பகுதிகளும் யானைகள் வழித்தடம் என்று அழைக்கப்படுகின்றன.

2012ம் ஆண்டு, கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் மாவட்ட வன அலுவலருக்கு எழுதிய கடிதத்தில், சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈஷா மையத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், மின் அதிர்வுகளால் தாக்கப்படும் யானைகள் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மலைபகுதி அல்லது மலையடிவார பகுதியில் எந்த ஒரு கட்டுமான பனியும் செயல்படுத்த ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்றழைக்கப்படும் மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெறவேண்டும். தற்போது ஈஷா மையத்தின் பரப்பளவு சுமார் 4,27,700 சதுர மீட்டர் அளவில் உள்ளது. இவற்றுக்கு மேற்கூறிய குழுவிடம் இன்று வரை அனுமதி வாங்கவில்லை ஈஷா மையம்.
இதன் காரணமாக கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் (Town and Country Planning) ஈஷா மையத்துக்கு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டு 5.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பின்பாக 2013ம் ஆண்டு அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமான பகுதிகளையும் இடிக்க நிர்வாக அமைப்புகளுக்கு அனுமதி கொடுத்து ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இந்த ஆணைஅமல்படுத்தப்படாமல் உள்ளது.
மேற்கூறிய ஆணை அமல்படுத்தப்பட்டு, சட்டபூர்வ அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டங்கள் இடிக்கப்பட வேண்டும் என்னும் கேரிக்கையோடு 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
தொடர்பான பதிவு: பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?
இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட இடைகால உத்தரவின் காரணமாகவே வனப்பகுதியில் ஈஷா மையம் வருடம்தோறும் நடத்தும் மாகசிவ ராத்திரி விழாக நிறுத்தப்பட்டு, நகரத்தில் நடைபெற தூவங்கியது.
மேலும், ஈஷா மையத்திற்கு world renowned institution என்னும் அடிப்படையில் 24மணி நேரமும் இலவச மின்சாரம் தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது. இதனை எதிர்த்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அதோடு இல்லாமல் சுமார் 15 வருடங்களாக சட்ட விதிமீறல்களை கண்கானிக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவிடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமஸ்கிரிதி என்னும் வேத பாடசாலையும் உள்ளே நடைபெறுகிறது. அனுமதி இல்லாத கட்டங்களில் இத்தகைய பள்ளிகள் செயல்பட அனுமதிக்க கூடாது என்னும் அடிப்படையிலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எல்லா வழக்குகளிலும் தமிழக அரசின் பதில் ஒன்று தான். அது, ஈஷா மையம் தங்களுக்கு எதிரான கட்டிய இடிப்பு ஆணைக்கு எதிராக தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளதால் தற்போது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பது மட்டுமே.
மேற் கூறிய வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. நீதிமன்றம் என்ன உத்தரவிட போகிறது என்று பார்ப்போம்.
பிற ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய தயாராகி கொடுள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு !!/thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக